ஹேரம்ப கணபதி

June 7, 2023 Off By mgnagaraj

ஹேரம்ப கணபதி ஆனவர் முப்பத்து இரண்டு கணபதிகளில் 11வது கணபதியாக விளங்குகிறார். இது விநாயகரின் ஐந்து முகங்களைக் கொண்ட திரு வடிவம்.   விநாயகரின் 32 திருவடிவங்கள் மிகவும் புகழ் புகழ்பெற்றவை. அவற்றில் இதுவும் ஒன்று.

ஹேரம்ப கணபதி

பிரம்ம வைவர்த்த புராணம், ஹேரம்ப என்னும் சொல்லின் பொருளினை அழகாக விளக்குகிறது. “ஹே” என்பது “உதவியற்ற நிலமை” என்பதைக் குறிக்கும். “ரம்ப” என்றால் “பாதுகாத்தல்” என்பதை குறிக்கும். இதனால் “ஹேரம்ப” என்பது “உதவியற்றவர்களைப் பாதுகாப்பவர்” என்று ஹேரம்ப கணபதியின் பெயர் பல்வேறு புராணங்களில் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. ‘முத்கல புராணத்தில்’ விநாயகரின் 32 வடிவங்களுள் ஒன்றாக இவர் விளங்குகிறார். வாரணாசியில் அமைந்திருக்கும் 56 மிகவும் சிறப்பு வாய்ந்த விநாயகர்களில் ஒன்றாக ஹேரம்ப கணபதியையும்  கந்த புராணம்  குறிப்பிட்டிருப்பது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. பிரம்ம வைவர்த்த புராணம், பத்ம புராணம், சிந்தியாகமம் மற்றும் கணேச புராணத்திலும் ஹேரம்ப கணபதியை பற்றிய சிறப்புகள் காணப்படுகிறது.

கணபதியின் திருவுருவ அமைப்பு :

ஹேரம்ப கணபதியின் திருவடிவமானது
பசுமை கலந்த கருமை நிறமும் ஐந்து  முகங்களுடனும் விளங்குகிறது. அபயம், வரதம் ஆகிய கைகளையும், மற்ற கரங்களில் பாசம், தந்தம், அட்சமாலை, மாலை, பரசு, சம்மட்டி, மோதகம், இனிமையான பழம் இவற்றைத் தாங்கி சிங்கவாகனத்தில் அமர்ந்து அருள் பாலிக்கின்றார்.

தாந்திரிய வழிபாட்டு முறையில் இவ்வடிவம் முக்கியமானது. இவர் சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பதால் அம்பிகையினுடைய சக்தியுடன் விளங்குகிறார் என்பது தனி சிறப்பாகும். ஆகையால் ஆன்மீக விஷயத்தில் உயர் நிலையில் உள்ளவர்கள் இந்த கணபதியே வழிபட்டு மேலும் ஞானத்தை அடையலாம் என்பது உறுதி.

நேபாள தேசத்தில் ஹேரம்ப கணபதி வழிபாடு மிகவும் பிரசித்தம். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி தேவி திருக்கோயிலில் பஞ்சமுக ஹேரம்ப கணபதிக்கு தனி சன்னதி அமைந்திருப்பது மிகவும் சிறப்பாகும்.

இப்படி சிறப்பு வாய்ந்த ஹேரம்ப கணபதியின் திரு அருள் எல்லோருக்கும் கிடைப்பதற்கும் மற்றும் அனைத்து விதமான தடங்கல்களையும் நீக்குவதற்கும் அவரிடம் பிரார்த்திப்போம்.

Total Page Visits: 331 - Today Page Visits: 3